மறக்க முடியுமா இன்றைய தினத்தை? | Today is 'Jallianwala Bagh massacre' day  

வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (13/04/2017)

கடைசி தொடர்பு:08:42 (13/04/2017)

மறக்க முடியுமா இன்றைய தினத்தை?

ஜாலியன்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh Massacre), அல்லது அமிர்தசரஸ் படுகொலை நடந்தேறிய தினம் இன்று.

Jallianwala Bagh massacre 
 

வட இந்தியாவின் அமிர்தசரஸ் நகரில், ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில் 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13 ல், பிரிட்டிஷ் ராணுவம் அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஏப்ரல் 13-ம் தேதி, குருகோவிந்த் சீக்கிய அறப்படை இயக்கத்துக்கு அடிக்கல் நாட்டிய தினம். பஞ்சாபில் அந்த தினத்தை விமர்சையாகக் கொண்டாடுவார்கள். 1919-ம் ஆண்டு அந்த தினத்தைக் கொண்டாட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர்  ஜாலியன்வாலா பாக் திடலில்  திரண்டனர். அந்தத் திடலில், நான்குபுறமும் உயர்ந்த மதில்கள். உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழிதான். கொண்டாட்டங்கள் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள்,  ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையிலான பிரிட்டிஷ் ராணுவம், பெரிய துப்பாக்கிக்களோடு வந்திறங்கின. 


ரெஜினால்ட் டையர்,  திரண்டிருந்த மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் தராமல், கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு ராணுவத்திடம் உத்தரவிட்டான். திறந்திருந்த ஒரேயொரு குறுகிய வாயிலை நோக்கி மக்கள் முண்டியடித்து ஓடினர். மதில் மீது ஏறிக் குதித்தனர். சிலர் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க அங்கிருந்த கிணற்றில் வீழ்ந்தனர். கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தில், அதிகாரபூர்வமாக மொத்தம் 379 பேர் கொல்லப்பட்டனர். அன்றிரவு ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருந்ததால்,  காயமடைந்த ஆயிரக்கணக்கானோர் அங்கேயே காலை வரையில் இருக்கவேண்டியதாகிவிட்டது. அங்கே, உயிரிழந்தவர்களின் நினைவாக ஜாலியன்வாலா பாக் நினைவிடம் அமைக்கப்பட்டது!

Jallianwala Bagh massacre
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


அதிகம் படித்தவை