சோ ராமசாமி, ஜேசுதாஸ், மாரியப்பனுக்கு பத்ம விருதுகள்..!

மாரியப்பன்

2017 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளை, ஜனாதிபதி இன்று வழங்கினார். தமிழகத்தின் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோ. ராமசாமிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. விருதை, அவரின் மனைவி ஜனாதிபதியிடம் இருந்து பெற்றார். 

பின்னணிப் பாடகரான ஜேசுதாஸுக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.மேலும், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மலிக் பத்மஸ்ரீ விருது பெற்றார். மற்றொரு விளையாட்டு வீராங்கனை ஜிம்னாஸ்டிக்ஸ் தீபா கர்மாகரும் பத்ம ஸ்ரீ விருது பெற்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!