Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘பெண்ணுக்கு ஆபாசப்படம் அனுப்பியவர் மீது நடவடிக்கை!’ மேனகா காந்தி ஆவேசம்

மேனகா காந்தி

ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் என டெக்னாலஜி நம் வீட்டின் இண்டு இடுக்குகளில் புகுந்ததன் விளைவு பல நல்ல விஷயங்களுக்கு இணையாக ஆபாசப்படம் என்கிற செயலால் பலரின் வாழ்வு நாசமாக்கப்படுவது தொடர்கிறது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படுவது பெண்களாகதான் இருக்கிறார்கள். பெண்களின் சமூகவலைதள பக்கங்களுக்கு ஆபாசப்படங்கள், குறுஞ்செய்திகள் என பெண்களுக்கு எதிரான வக்கிரங்கள் அதிகரித்து வருகிறன.

இச்செயல்களால் பாதிக்கப்படும் பெண்கள் சமூகத்தை எதிர்கொள்ள பயந்து தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள். தைரியமாக என் பிரச்னையை முன்னெடுத்துச் செல்வேன் என்கிற பெண்கள் அணுகுவது காவல்துறையை அல்லது சைபர் கிரைம் துறையை. அப்படி பெண்கள் அணுகும்போது சம்பந்தப்பட்ட துறைகளில் அவர்களுக்கு முறையான உதவி கிடைக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம்.

சமூக வலைதளத்தால் தனக்கு ஏற்பட்ட துன்புறுத்தலை மத்திய அமைச்சர் மேனகா காந்தி வரை கொண்டு சென்றிருக்கிறார்  ரானா ஆயூப். 

 

ஆபாசப்படம்

 

குஜராத்தைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளர் ரானா ஆயூப். ஐக்கிய அரபு எமிரேட் நிறுவனத்தில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த பின்ஸி லால் என்பவர், அயூபின் மெசேஜில் ஆபாச வார்த்தைகளால் நிறைக்க அதிர்ந்து பின்வாங்கிவிடவில்லை அயூப்.

மாறாக பின்ஸி லாலின் பதிவுகளையும், லால் பற்றிய விவரங்களையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலானது. இதனைப் பார்த்த பின்ஸி லால் பணிபுரியும் நிறுவனம், உடனடியாக லாலை பணி நீக்கம் செய்து அவரது விசாவையும் முடக்கியுள்ளது. ரானா ஆயுப்பின் இந்தத் துணிச்சலான செயலைப் பலரும் வரவேற்று வாழ்த்துத் தெரிவித்தனர். 

தற்போது மும்பையைச் சேர்ந்த 17 வயது சிறுமியின் இன்ஸ்டாகிராமுக்கு ஒருவர் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார். மேலும், அச்சிறுமியின் புகைப்படத்தை ஆடையில்லா பெண்ணின் படத்தில் பொருத்தி அதை சமூக வலைதளத்தில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி, தன் பெற்றோரிடம் விபரங்களைக் கூற, சிறுமியின் தந்தை சைபர் க்ரைமில் புகார் அளிக்கச் சென்றுள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசாரோ, தவறு செய்த நபரைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவதற்கு மாறாக, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையிடம், 'நீங்கள் உங்கள் பெண்ணுக்கு அதிக சுதந்திரம் கொடுப்பதால்தான் இந்த மாதிரியான பிரச்னைகள் ஏற்படுகிறது. முதலில் உங்கள் பெண்ணின் அனைத்து சமூக வலைத்தள கணக்குகளையும் முடக்குங்கள்' எனச் சொல்லி நோகடித்துள்ளனர். 

சிறுமியின் சகோதரி சாலிகா பாட்வாலா இதுகுறித்து தனது ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவினைப் பார்த்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, சாலிகா பாட்வாலா விஷயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அதோடு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும்பைந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து சாலிகா பாட்வாலாவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவுக் கரங்கள் நீள்கிறது. இந்த விஷயத்தில் இறுதி வரை போராடுவேன் எனப் பதிவிட்டுள்ளார் சாலிகா. 

பெண் பத்திரிக்கையாளர் ரானா ஆயூப், சாலிகா போன்றவர்களின் தைரியமான எதிர்வினையால் பெண்களுக்கு எதிரான சமூக வலைத்தள சீண்டல்கள் இனியாவது ஒழிய வேண்டும். 

- ஆர்.ஜெயலெட்சுமி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close