கூலித் தொழிலாளியாக வேலை செய்யப்போகும் தெலுங்கானா முதல்வர்!

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட பின்பு நடைபெற்ற முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றவர் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ். பல அதிரடி நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களை அடிக்கடி அறிவித்து வரும் அவர், தற்போது இரண்டு நாள்களுக்கு கூலித் தொழிலாளியாக வேலை செய்ய முடிவெடுத்து இருக்கிறார். மேலும், அவரது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இதைப் போன்று இரண்டு நாள்களுக்கு கூலி வேலை செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த முடிவுக்குக் காரணம், அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதியின் ஆண்டு விழா நடைபெற உள்ளதாம். அதற்காக நிதி திரட்டுவதற்காக இந்தப் புதிய முயற்சியை முன்நின்று சந்திரசேகர் ராவ் ஆரம்பிக்கிறார். இதனால், வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து சந்திரசேகர் ராவின் கட்சிக்காரர்கள், இரண்டு நாள்கள் கூலி வேலையில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்த புதிய முயற்சிக்கு சந்திரசேகர் ராவ், 'பிங்க் கூலித் தொழிலாளி நாள்கள்' என்று பெயர் வைத்துள்ளார். இதற்குக் காரணம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நிறம் பிங்க் என்பதால்தான். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!