வெளியிடப்பட்ட நேரம்: 03:28 (14/04/2017)

கடைசி தொடர்பு:03:59 (14/04/2017)

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் - உத்தரப்பிரதேச தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றதாகவும், மீண்டும் வாக்குச்சீட்டு முறை கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தன.

இதற்குப் பதிலடி தரும்விதமாக, வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் நிரூபிக்க மே மாதம் முதல் வாரத்தில் எதிர்க்கட்சிகளுக்கு அவகாசம் கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் ஆணையம் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சீட்டை பயன்படுத்தப் போவதாக எச்சரித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் வருகின்ற ஜூலை மாதம் 15-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பழுதில்லா வேலை செய்யக்கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, தலைமைத் தேர்தல் ஆணையம் தராவிட்டால் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும் என உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் ஆணையர் எஸ்.கே.அகர்வால் எச்சரித்துள்ளார்.