கைரேகை மூலம் பணம் செலுத்தும் 'பீம்-ஆதார்' வசதி - இன்று அறிமுகம் செய்கிறார் மோடி

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய யு.பி.ஐ தொழில்நுட்பம் மூலம் செயல்படும் 'பீம்' உள்ளிட்ட பல அப்ளிகேஷன்கள், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருகின்றன.

பீம் - BHIM

பொதுவாக, டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவதற்கு இன்டர்நெட் வசதி, டெபிட் கார்ட் மற்றும் கிரெடிட் கார்ட் தகவல்கள் தேவைப்படுகின்றன. ஆனால் ஏழை எளிய மக்களும் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தும் விதமாக, சட்டமேதை அம்பேத்கரின் 126-வது பிறந்த நாளான இன்று 'பீம் - ஆதார்' வசதியை பிரதமர் மோடி அறிமுகப்படுத்த இருக்கிறார்.

இதன் மூலம் கை ரேகை போன்ற பயோமெட்ரிக் தகவல்களைக் கொண்டு, ஆதார் எண்ணோடு இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்து பணம் செலுத்தலாம். முதற்கட்டமாக இந்த வசதியின் மூலம் 27 வங்கிகள் பணத்தை செலுத்தவும், பெற்றுக்கொள்ளவும் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!