வெளியிடப்பட்ட நேரம்: 04:27 (14/04/2017)

கடைசி தொடர்பு:04:27 (14/04/2017)

மத்திய அரசைப் பாராட்டும் முதல்வர் நாராயணசாமி

புதுவை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கிரண்பேடி, சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அரசியல் வட்டாரத்தில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின்  செயல்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் புகார் அளிப்பது என்று காங்கிரஸ் கட்சி கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Narayanasamy

இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி கூறுகையில், ''நான் பதவி ஏற்றபோது ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துள்ளேன். அதனால்  நிர்வாகம் தொடர்பாக வெளியில் பேசமாட்டேன். ஆளுநரின் குற்றச்சாட்டுகள் குறித்தும் விவாதிக்கமாட்டேன். அவரிடம் இருந்து எழுத்துப்பூர்வமாக வரும் வி‌ஷயங்களுக்கு மட்டும் பதில் அளிப்பேன். புதுவை மாநிலத்தின் கோரிக்கைகள் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுகு முறையாக போய் சேரவில்லை. ஆனால், தற்போது காங்கிரஸ் ஆட்சி வந்தபின்னர், பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்துள்ளோம். இந்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கிறது'' என்று சொன்னார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க