வெளியிடப்பட்ட நேரம்: 04:36 (14/04/2017)

கடைசி தொடர்பு:04:36 (14/04/2017)

'ஐ.என்.எஸ் சென்னை' போர்க்கப்பல் நாளை சென்னைக்கு வருகிறது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ் சென்னை போர்க்கப்பல் நாளை சென்னைக்கு வருகிறது. இதை முன்னிட்டு முறைப்படியான வரவேற்புகள் காலை 9  மணிக்கு சென்னை துறைமுகத்தில் நடக்கிறது. இந்த கப்பலைப் பார்க்க பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை சென்னை மெரினாவில் பொதுமக்கள் பார்வைக்காக மின் அலங்காரத்துடன் நிறுத்தி வைக்கப்படுகிறது.

INS Chennai

2016-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி  இந்திய கடற்படையில் இந்த கப்பல் சேர்த்துக் கொள்ளப்பட்டது. மும்பையில் உள்ள மஸாகோன் கப்பல் கட்டும் பணிமனையில் உருவாக்கப்பட்ட இந்த போர்க்கப்பல் மேற்கு கடற்படை கட்டுப்பாட்டு தலைமையின்கீழ் இயங்கி வருகிறது. 

ஏவுகணைகளை கொண்டு நீண்ட தொலைவு இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட இக்கப்பல் 164 மீட்டர் நீளம் மற்றும் 7,500 டன் எடையுடையது.  164 மீட்டர் நீளம் கொண்ட இந்த போர்க்கப்பல் 7,500 டன் எடையை சுமந்தபடி செல்லும் சக்தி கொண்டதாகும். இதே வகையிலான ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ கடந்த 16-8-2014 அன்றும், ‘ஐ.என்.எஸ். கொச்சி’ கடந்த 30-9-2015 அன்றும் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இவ்விரு கப்பல்களை விடவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன், தரையில் இருந்து பாய்ந்து சென்று தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ‘பிரமோஸ்’ ஏவுகணை, மற்றும் தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ‘பரக்-8’ ஏவுகணை போன்றவை ‘ஐ.என்.எஸ். சென்னை’ போர்க்கப்பலில் இணைக்கப்பட்டுள்ளன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க