மிஷன் 2019... ஒடிசாவில் இன்று பி.ஜே.பி தேசிய செயற்குழு!

பி.ஜே.பி-யின் தேசிய செயற்குழுக் கூட்டம், ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக,  ஒருநாள் முன்னதாகவே அந்தக் கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, புவனேஸ்வர் வந்துவிட்டார். அங்கு 14-ம் தேதி, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, கட்சி நிர்வாகிகளைச் சத்தித்தார். இன்று தொடங்கும் இரண்டு நாள் கூட்டத்தை அமித்ஷா தொடங்கிவைக்கிறார். 16-ம் தேதி, பிரதமர் மோடி முடித்துவைத்துப் பேசுகிறார்.

Modi Amit Shah

தேசிய செயற்குழுக் கூட்டம் குறித்து, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ''கடந்த ஆண்டு கேரளாவில் தேசிய கவுன்சில் கூட்டத்தைக் கூட்டினோம். 2016 சட்டமன்றத் தேர்தலில் அங்கு முதல் கணக்கை பி.ஜே.பி தொடங்கியது. அதன் பிறகு, உத்தரப்பிரதேசம் அலகபாத்தில் கடந்த ஜூன் மாதம் தேசிய செயற்குழுவைக் கூட்டினோம். 14 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஆட்சியை அமைத்து இருக்கிறோம். மேற்குவங்களாம், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் பி.ஜே.பி காலூன்ற வேண்டும். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்த மாநிலங்களில் பி.ஜே.பி பலமாகக் காலூன்றி, பெரிய அளவில் வெற்றியைத் தேடித்தரும். கட்சி வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சி குறித்து தேசிய செயற்குழுவில் விவாதிக்கப்படும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!