Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஒரு ரூபாய் நாணயத்தைவைத்து, ரூ.20 லட்சம் கொள்ளை!

பாட்னாவில், ஒரு ரூபாய் நாணயத்தைவைத்து ரயிலை நிறுத்தி, பயணிகளிடம் கொள்ளையடிக்கும் பகீர் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புதுடெல்லி-பாட்னா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில், கடந்த வாரம் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக, கிழக்கு மத்திய ரயில்வே போலீசார் நான்கு பேரை கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Train


அதன்படி, ரயில் தண்டவாளங்கள் இணையும் இடத்தில் உள்ள ரப்பர்களைத் தூக்கிவிட்டு, அங்கு ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துவிடுவார்களாம். அந்த நாணயத்தின் மீது ரயில் ஏறியதும் நாணயம் உடையும். இதனால், ரெட் சிக்னல் விழுமாம். அதனால், டிரைவர் வேறு வழியில்லாமல் ரயிலை நிறுத்தவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவார்.


அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, கொள்ளையர்கள் தங்களது கை வரிசையைக் காண்பிப்பார்கள். இந்த டெக்னிக்கை அவர்கள் பலமுறை பயன்படுத்தியுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும், அவர்கள் ரூ.20 லட்சம் மதிப்பிலான பணம், பொருள்களைக் கொள்ளையடித்துள்ளனர். இதையடுத்து, கைதுசெய்யப்பட்டவர்களிடம் செல்போன்கள், வாலட்டுகள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement