Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியைத் துறந்ததற்கு, பாரிக்கர் சொல்லும் காரணம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர், மீண்டும் கோவா முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

Manohar Parrikar


இந்த நிலையில், கோவாவில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பாரிக்கர், "நான், டெல்லி அரசியலுக்குப் பழக்கப்பட்டவன் அல்ல. அது எனக்கான தளமும் இல்லை. குறிப்பாக, காஷ்மீர் பிரச்னை போன்றவற்றில் எனக்கு கடுமையான அழுத்தம் ஏற்பட்டது. காஷ்மீர் பிரச்னையைச் சரிசெய்வது அவ்வளவு எளிதான ஒன்று இல்லை. அதற்கு நீண்ட காலத் திட்டம் தேவை. 


எனவே, மீண்டும் மாநில அரசியலில் வாய்ப்புக் கிடைத்ததால், பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை விட்டுவிட்டு, கோவா முதல்வரானேன். காஷ்மீர் பிரச்னை போன்றவற்றை விவாதிப்பதைவிட, அதற்கு ஆக்கபூர்வமான செயல்கள்தான் தீர்வாக இருக்கும். விவாதம் அதற்குத் தீர்வாகாது. குல்பூஷன் ஜாதவ் விவகாரத்தில், பாகிஸ்தான் ஆபத்தான விளையாட்டை விளையாடிவருகிறது" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement