வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (15/04/2017)

கடைசி தொடர்பு:11:19 (15/04/2017)

#UPDATE உ.பி ரயில் விபத்து : எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டன! 

உத்தரப்பிரதேசத்தில், ராம்பூர் என்னும் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. மீரட்டில் இருந்து லக்னோவுக்கு இயக்கப்படும்  ராஜ்ய ராணி விரைவு ரயில், ராம்பூர் என்னும் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, ரயிலின் எட்டுப் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

rajya rani express derailment
 

விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து  தொடர்பாக விசாரணை நடத்தப்படும்  என்று ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார் . படுகாயம் அடைந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.50,000, லேசாக காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க