ஸ்ரீநகர் இடைத்தேர்தல்- முன்னிலையில் பரூக் அப்துல்லா

காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் இடைத்தேர்தலில், இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில்...  காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா  தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறார்.

Farooq Abdullah

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீநகர் லோக்சபா தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக, கடந்த வியாழக்கிழமையும் வாக்களிப்பு நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, இன்று காலை முதல் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில், காஷ்மீர் முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் மாநாட்டுக் கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா, தொடர்ந்து முன்னிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வாக்குகள் பதிவாகின. இந்த இடைத்தேர்தலின்போது, வன்முறைகள் அதிகம். இதனால், முதல் கட்ட வாக்களிப்பில் ஏழு சதவிகித வாக்குகளே பதிவாகின. இதனால், மீண்டும் நடத்தப்பட்ட வாக்களிப்பு நாளில், இரண்டு  சதவிகித வாக்குகளே பதிவானது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!