தமிழகத்தில் நீட் தேர்வுகுறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா முக்கிய அறிவிப்பு! | NEET exams will be conducted this year in Tamilnadu, says minister J.P.Nadda

வெளியிடப்பட்ட நேரம்: 12:38 (15/04/2017)

கடைசி தொடர்பு:12:53 (15/04/2017)

தமிழகத்தில் நீட் தேர்வுகுறித்து மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில், இந்த ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் எனத் தெரிவித்த மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, 'தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றார்.

 ஜே.பி.நட்டா

 

மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நடத்தப்படும். இம்மாதிரியான பொது நுழைவுத் தேர்வால், தமிழக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவர் என தமிழகம் நீட் தேர்வில் இருந்து விலகியிருந்தது. 

இந்த நிலையில், 'தமிழகத்தில் நீட் தேர்வுகள் இந்த வருடம் கண்டிப்பாக நடக்கும் என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்'. சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஜே.பி.நட்டா, ‘தமிழகத்தில் நீட் தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும்’ எனத் தெரிவித்தார்.

மேலும், தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு, நீட் தேர்வில் சிறப்பு ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசுக்குப் பரிந்துரைப்பதாகவும் கூறினார்.