100 கோடி செலவில் பிரமாண்ட அம்பேத்கர் பூங்கா. 126 அடியில் அம்பேத்கர் சிலை!

ஆந்திராவில், 100 கோடி ரூபாய் செலவில் அம்பேத்கர் நினைவுப்  பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா, நேற்று நடைபெற்றது.

chandra babu naidu
 

அமராவதியில், 20 ஏக்கர் நிலப்பரப்பில் அம்பேத்கர் நினைவுப் பூங்கா அமைக்க, முதல்வர் சந்திர பாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசு முடிவுசெய்துள்ளது.  இதற்காக, 97.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்காவில்,  126 அடி உயர அம்பேத்கர் சிலை நிறுவ உள்ளனர். பூங்கா அமைக்க ஒதுக்கீடுசெய்யப்பட்ட மொத்த நிதியில், சிலைக்கு மட்டும் 25 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்துள்ளனர். பூங்காவுக்குள் அம்பேத்கர் நினைவு நூலகமும் அமைக்கப்பட உள்ளது. அம்பேத்கர் பிறந்த தினமான நேற்று, முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தப் பிரமாண்ட பூங்காவுக்கான அடிக்கல்லை நாட்டினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!