Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுற்றுலா சென்ற எட்டு மாணவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்

மகாராஷ்டிரா மாநிலம் வெயிரி கடலில் குளித்த கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் இருந்து அவர்கள் கல்லூரி சுற்றுலா வந்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியைச் சேர்ந்த மராத்தா கல்லூரியைச் சேர்ந்த 40 மாணவர்கள் மகாராஷ்டிராவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சித்தூதர்க்  பகுதியில் அமைந்துள்ள வெயிரி கடற்கரையில் இவர்கள் குளித்து கொண்டிருக்கும்போது, எட்டு மாணவர்கள் கடலில் மூழ்கி தவித்துள்ளனர்.

உடனடியாக உதவ யாருமில்லாத சூழலில், கடலில் மூழ்கிய எட்டு மாணவர்களும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மற்ற மாணவர்கள் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கடலில் மூழ்கிய மாணவர்களின் உடலை மீட்கும்பணி முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கிறது. கடலோர காவல் படையினரும், அப்பகுதி மீனவர்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close