டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளை அதிரவைத்த ஆபாசப் படம்!

டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென விளம்பரத் திரைகளில் ஆபாசப்படம் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

டெல்லி மெட்ரோ

 

டெல்லியில் ராஜீவ் செளக் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள விளம்பரத் திரைகளில் ஆபாச வீடியோ காட்சி ஒன்று ஒளிபரப்பாகியது. ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே ஓடிய அந்த வீடியோவால் பயணிகள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் அவர்களது மொபைல் போன்களில் படம்பிடித்து மெட்ரோ ரயில்வே துறையின் நிர்வாகத் திறனை சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

டெல்லி மெட்ரோ ரயில் நிலைய வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் அதிக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. ஏப்ரல் 9-ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் தங்களுக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்துள்ளது. 

மேலும் நிர்வாகிகள் கூறுகையில், ‘தனியார் ஒப்பந்ததாரரிடமே விளம்பரத் திரைகள் தரப்பட்டுள்ளன. சம்பவத்தன்று விளம்பர சோதனை நடந்துள்ளது. அப்போது என்ன நடந்தது எனத் தெரியவில்லை’ என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!