Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெட்ரோல், டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 39 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை 1 ரூபாய்  04 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. 

Petrol, Diesel hiked


பெட்ரோல், டீசலின் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் 15 நாள்களுக்கு ஒரு முறை மாற்றியமைத்து வருகின்றன. இதற்கிடையே, மே 1-ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றம் கொண்டு வரும் முறை அமலுக்கு வருகிறது. அதன்படி, முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டணம், ஆந்திரா,  உதய்பூர்,  ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் இந்த திட்டம் வருகிறது. இதன் பிறகு மற்ற பகுதிகளுக்கும், இந்த நடைமுறை அமல்படுத்தப்படும்.

இந்நிலையில், தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு  1ரூபாய் 39 பைசாவும், டீசல் விலை 1 ரூபாய்  04 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.  இந்த விலை மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் 31-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.91 குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close