Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு: மருந்துக்கடை உரிமையாளர் பலி


காஷ்மீரில் தீவிரவாதிகள், நடத்திய துப்பாக்கிச்சூட்டில், மருந்துக்கடை உரிமையாளர் ஒருவர் உயிரிழந்தார்.

Terrorsit

காஷ்மீர், ஶ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலின் போது, வன்முறை வெடித்தது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், போராட்டக்கார்கள் கற்களை வீசவே, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் எட்டு பேர் பலியானார்கள்.


இந்த சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இதற்கிடையே, ஶ்ரீநகரில், நேற்று பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது, போராட்டக்கார்கள், கற்களை வீசியதால், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள், மருந்துக்கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து விட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று இரவு பஷிர் அகமது என்ற அந்த மருந்துக்கடை உரிமையாளரை, தீவிரவாதிகள் சுட்டனர். இதில், பஷிர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மேலும், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close