வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (16/04/2017)

கடைசி தொடர்பு:08:25 (16/04/2017)

’இனி வரும் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு வேண்டாம்’ : அகிலேஷ் யாதவ்

தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறையே பின்பற்ற வேண்டும் என்று  சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்து உள்ளார்.

akhilesh yadav
 

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்றது. யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றார். காங்கிரஸ் சமாஜ்வாதி கூட்டணி தோல்வியடைந்ததை தொடர்ந்து மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து, தேர்தலில், பா.ஜ.க வெற்றி பெற்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது.  பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட  கட்சிகளும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தன.

தற்போது சமாஜ்வாதி தலைவர் அகிலேஷும் மின்னணு வாக்குப்பதிவு குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து லக்னோவில் பேசிய அகிலேஷ், ” மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து எங்களுக்கு கவலை இல்லை. முறைகேடுகளை தடுக்க இனி வரும் அனைத்து தேர்தல்களிலும், ஓட்டுச்சீட்டு முறையே பின்பற்றப்பட வேண்டும்”, என்று வலியுறுத்தி உள்ளார்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க