மோடியின் குஜராத் விசிட்  இதற்குதானாம்!

குஜராத் மாநிலத்தில் இரண்டு நாள்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சூரத் நகரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

Modi
 

பிரதமர் மோடி இன்று மாலை 6.45 மணிக்கு சூரத் விமான நிலையத்துக்கு வந்தடைவார். இந்த சுற்று   பயணத்தின்போது பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். 400 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள கிரண் பல்நோக்கு மருத்துவமனையை நாளை திறந்து வைக்கிறார். பின்னர் வைரத்தை பட்டை தீட்டும் ஆலை ஒன்றையும் திறந்துவைக்க உள்ளார். இது போன்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்க உள்ள மோடிக்கு சூரத் நகரில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க பா.ஜ.கவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
 
சூரத்தில் 35 இடங்களில் பெரிய கட் அவுட்டுகள், மோடியின்  தூய்மை இந்தியா போன்ற திட்டங்களை பாராட்டி பேனர்கள், புதிய சாலைகள் என ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மோடி வரவேற்புக்கு மட்டும் சுமார் 4-5 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக சூரத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

குஜராத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், அங்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை ஏற்படுத்தும் வகையில் மோடியின் இந்த பயண திட்டங்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. குஜராத்தில்  பா.ஜ.க. மீது அம்மாநில மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பத்தார் இன மக்களும், தாழ்த்தப்பட்ட பிரிவினரும் பா.ஜ.கவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இதனால் மீண்டும் மக்களின் மனதில் இடம்பிடிக்கும் நோக்கில் மோடி கவனம் செலுத்தி வருகிறார்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!