சென்னை, மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் உள்ள விமானங்களை ஒரே நேரத்தில் கடத்த மர்ம நபர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய மூன்று விமான நிலையங்களில் உள்ள விமானங்களை கடத்துவது தொடர்பாக 6 இளைஞர்கள் விவாதித்தார்கள் என்று ஒரு பெண்ணிடம் இருந்து ஈமெயில் வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மேலும் 23 பேர் இந்த கடத்தல் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. இதனையடுத்து விமான நிலையம் பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தையடுத்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு வீரர்கள் மூலம் மூன்று விமான நிலையங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பயணம் செய்பவர்களும் தீவிர சோதனை செய்த பிறகே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!