அரை லிட்டர் கோமியம் 365 ரூபாய்.. ஆஃபர் உள்ளவரை மட்டுமே!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில், அரைலிட்டர் கோமியம்  365 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பற்றிய ஸ்கிரீன் ஷார்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

cow urine online
 

அமேசான் தளத்தில் முன்னணி மூலிகை நிறுவனம் ஒன்று, கோமியத்தை விற்பனைக்கு வைத்துள்ளது. கடந்த சில மாதங்களாக, சில நிறுவனங்கள் கோமியத்தை ஆன்லைனில் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால்  அமேசானில் கோமியத்தை  விற்பனை செய்யும் நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் தர சான்றிதழ் பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தின் கோமியத்தில் துளசி, ஏலக்காய் சேர்க்கப்பட்டுள்ளதாம். காலையும் மாலையும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் நோயே வராது என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அரை லிட்டர் கோமியத்தை 2 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தாவிட்டால், காலாவதி ஆகிவிடும் என்று தெரிவித்துள்ளனர்.  கோமியத்தை ஆர்டர் செய்வோருக்கு  டெலிவரி சார்ஜ் 70 ரூபாய் !
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!