Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் 'ரெட் அலர்ட்' : போலீஸாருக்கு முக்கிய உத்தரவு!

காஷ்மீரில், ஶ்ரீநகர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலின்போது வன்முறை ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், போராட்டக்கார்கள் கற்களை வீசவே, பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், எட்டு பேர் பலியானார்கள்.

Kashmir


இந்தச் சம்பவத்தையடுத்து, அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன், போராட்டக்கார்களுக்கும் பாதுகாப்புப்படையினருக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், ஓர் இளைஞர் பலியானதாகக் கூறப்படுகிறது.


மேலும், மருந்துக்கடை உரிமையாளர் ஒருவரின் வீட்டுக்குள் நுழைந்த தீவிரவாதிகள், அவரைச் சுட்டனர். இதில், அவர் உயிரிழந்தார். இப்படி, அங்கு பதற்றம் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், அங்கு போலீஸார் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி ஜம்மு-காஷ்மீர் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


குறிப்பாக, அடுத்த மூன்று மாதங்களுக்கு, போலீஸார் யாரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. முக்கியமாக, தெற்குக் காஷ்மீரில் இருப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close