Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆசியாவின் சூப்பர் சாதனையாளர், தீபா கர்மாகர்- போர்ப்ஸ் வெளியீடு!

ஆசியாவின் சூப்பர் சாதனையாளர்கள் பட்டியலில், இந்தியாவின் தீபா கர்மாகர், சாக்‌ஷி மாலிக், ஆலியா பட் உள்ளிட்ட 53 இளம் இந்தியச் சாதனையாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

dipa

போர்ப்ஸ் பத்திரிகை, ஆசியாவின் இளம் சாதனையாளர்கள் என்ற 300 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. எல்லைகளுக்கு அப்பால் புதுமை படைப்பவர்களாக அறிமுகப்படுத்தப்படும் இந்தச் சாதனையாளர்களின் பட்டியலில், 53 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளார்கள். அதிகபட்சமாக, சீனா 76 சாதனையாளர்களைக் கொண்டுள்ளது. இரண்டாம் இடம், இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது.

கலை, இலக்கியம், தொழில் எனப் பல்வேறு தளங்களிலும் சிறந்து விளங்கும் சாதனையாளர்களில், 30 வயதுக்குக் குறைவான இளம் சாதனையாளர்களைத் தற்போது போர்ப்ஸ் அடையாளப்படுத்தி அங்கீகரித்துள்ளது. இதில், விளையாட்டுத்துறைப் பிரிவில், ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாவிட்டாலும் இந்தியாவின் முதல் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற சாக்‌ஷி மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கலைத்துறையில் மிகவும் இளம் வயதிலேயே அதிகப் படங்களில் நடித்தவரும்,  உலகளாவிய வசூல் சாதனை படைத்தவருமான பாலிவுட் நடிகை ஆலியா பட், இந்தப் பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும், இந்தப் பட்டியலில் சிறந்த இந்திய இளம் தொழிலதிபர்களும், விஞ்ஞானிகளும், விளையாட்டு வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement