ஐசிசி கூட்டங்களில் பங்கேற்க ஸ்ரீநிவாசனுக்குத் தடை: உச்சநீதிமன்றம் | Srinivasan cannot attend ICC meetings, says SC

வெளியிடப்பட்ட நேரம்: 17:33 (17/04/2017)

கடைசி தொடர்பு:17:33 (17/04/2017)

ஐசிசி கூட்டங்களில் பங்கேற்க ஸ்ரீநிவாசனுக்குத் தடை: உச்சநீதிமன்றம்

ஐசிசி முன்னாள் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஸ்ரீநிவாசனுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தொடரில் பங்கேற்க உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

ஸ்ரீநி

வருகிற ஏப்ரல் 24-ம் தேதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தொடர் நடைபெற இருக்கிறது. இதில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் பிரதிநிதியாக ஸ்ரீநிவாசனை அனுப்பக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை அறிவித்துள்ளது.

ஸ்ரீநிவாசனின் நேர்மை கேள்விக்கு உள்ளாகியுள்ளதால் இவரை இந்தியப் பிரதிநிதியாக சர்வதேசக் கூட்டங்களுக்கு அனுப்புவது முறையற்றது என உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. பிசிசிஐ பிரதிநிதிகளாக அமிதாப் சவுத்ரி மற்றும் ராகுல் ஜோரி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.


[X] Close

[X] Close