Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

காஷ்மீரில் கலவரத்தைக் கட்டுப்படுத்த பிளாஸ்டிக் புல்லட்...

காஷ்மீர் மாநிலத்தில் பல்வேறு காரணங்களால் மறுபடியும் உள்நாட்டுக் கலவரம் அதிகரித்துள்ளது. கலவரத்தில் ஈடுபடும் மக்களை கலைக்க பாதுகாப்புப் படையினரால் தற்போது 'பிளாஸ்டிக் குண்டுகள்' பொருத்தப்பட்ட துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்ற ஆண்டு அங்கு நடைபெற்ற கலவரங்களின்போது, பாதுகாப்பு படை வீரர்கள் 'பெல்லட்' வகை குண்டுகளை பயன்படுத்தினர். இது உயிரை எடுக்காது ஆயினும், தாக்கப்படுபவர்களின் முகம் மற்றும் கண்களுக்கு பலத்த சேதம் விளைவிப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்தப் புகார் எதிரொலிதான், தற்போது பிளாஸ்டிக் குண்டுகள் பயன்படுத்தும் நடவடிக்கைக்கு உள்துறை அமைச்சகம் வந்துள்ளதாம்.

காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருவதால், அங்கு சமீபத்தில் நடைபெற்ற ஶ்ரீநகர் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் 7 சதவிகித வாக்கு மட்டுமே பதிவாகியது குறிப்பிடத்தக்கது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close