நெருக்கடியில் சிக்கியுள்ள 4 லட்சம் நிறுவனங்கள்... அதிரடி காட்டும் மத்திய அரசு!

வருமானவரி கட்டத்தவறிய நான்கு லட்ச நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. 

IT returns

ஷெல் கம்பெனிகள் என்னும் போலி நிறுவனங்களின் மீது நடத்தப்பட்ட அதிரடி நடவடிக்கைக்குப் பின்னர் பல நிறுவனங்கள் வரி கட்டத்தவறியதும், வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாட்டில் உள்ள நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு கடந்த ஒரு மாத காலமாகவே வரி செலுத்துவது தொடர்பான அறிவிப்புகளை வழங்கி வருகிறது. 

தற்போது வரி செலுத்தாதவர்களுக்கு வருமானவரித் துறை 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. தவறும் நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் கடந்த மூன்று நிதி ஆண்டுகளாகவே எவ்வித வரியும் செலுத்தவில்லை என்பதும் அறியப்பட்டுள்ளது.

மேலும், குறைந்த வருமானம் உள்ள நிறுவனங்கள், நஷ்டமடைந்த நிறுவனங்கள் ’கம்பெனி சட்ட’ப்படி ‘செயலற்ற நிறுவனங்களாகத் தங்களை அறிவித்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இதனால் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

வரி செலுத்தத் தவறும் நிறுவனங்களின் பெயர்ப் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு முழு விபரங்களுடன் வெளியிடப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!