வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (18/04/2017)

கடைசி தொடர்பு:15:18 (18/04/2017)

மதம் சார்ந்த ஒதுக்கீடுகள் சட்டத்துக்குப் புறம்பானது- வெங்கைய நாயுடு

’மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடுகள் வழங்குவது இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானது’ என மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.

வெங்கையா நாயுடு

இடஒதுக்கீடுகள் எப்போதுமே மதம் சார்ந்து வழங்கப்படுவதில்லை. அவ்வாறு வழங்குவதும் கூடாது என மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தெலங்கானா மாநிலத்தில் மதம் சார்ந்த இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அமைச்சரின் கருத்து வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் கடந்த வாரம் முஸ்லிம் சமூகத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சார்ந்தோருக்குக் கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலைகளிலும் முன்னுரிமை வழங்கப்படும் என மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கைய நாயுடு ’மதரீதியான இடஒதுக்கீடுகளுக்கு சட்டம் என்றுமே அனுமதித்தது இல்லை. இந்தியா என்றுமே இதை விரும்பாது’ எனத் தெரிவித்துள்ளார்.