வெளியிடப்பட்ட நேரம்: 11:16 (19/04/2017)

கடைசி தொடர்பு:12:13 (19/04/2017)

முதல்வர் பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு வெங்கைய நாயுடு முக்கிய வேண்டுகோள்!

'அ.தி.மு.க-வில் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்பட்டுவரும் இந்த நேரத்தில், அ.தி.மு.க-வைச் சேர்ந்த அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பது தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு செய்யும் மரியாதை' என்று கூறியுள்ளார், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு. 

venkaiah naidu

'தமிழக மக்களின் நலனை கருத்தில்கொண்டு, அ.தி.மு.க கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்' என மத்திய அமைச்சர் வெங்கைய  நாயுடு கூறியுள்ளார். தொடர் குழப்பங்கள் நிலவிவரும் வேளையில், கட்சியினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அ.தி.மு.க மற்றும் தமிழகத்தில் நிகழும் அரசியல் சூழ்நிலைகளுக்கும், குழப்பங்களுக்கும் மத்திய அரசோ, பாரதிய ஜனதா கட்சியோ எந்த விதத்திலும் பொறுப்பாகாது என்றும்,  இது முற்றிலும் அவர்களின் தனிப்பட்ட விஷயம் என்றும் கூறியுள்ளார்.

தற்போது, கட்சியின் நலன் கருதியும் தமிழகத்தின் வளர்ச்சி கருதியும் அ.தி.மு.க-வினர் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டுமென வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார்.