வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (19/04/2017)

கடைசி தொடர்பு:15:13 (19/04/2017)

சிம்லாவில் பேருந்து விபத்து- 40க்கும் மேற்பட்டோர் பலி

சிம்லாவில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. 40க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

சிம்லா மாவட்டதில் அமைந்திருக்கும் டான்ஸ் நதியில் பேருந்து ஒன்று கவிழ்ந்துள்ளது. சுமார் 50 பேர் வரை இப்பேருந்தில் பயணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்த பலர் இறந்துள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், தற்போது மீட்புப் படை அங்கு விரைந்துள்ளது. மீட்பு பணிகள் முழுவீச்சில் முடக்கிவிடப்பட்டுள்ளன. 

இதுவரை நடைபெற்ற மீட்பு பணிகளின்போது 44 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. பல அடி பள்ளத்தில் பேருந்து சிக்கியிருப்பதால் மீட்புப் பணியினர் அங்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.