Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உணவு சரியில்லை என்று புகார் அளித்த ராணுவ வீரர் டிஸ்மிஸ்

தேஜ் பகதூர் யாதவை ஞாபகம் இருக்கிறதா? ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து, வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் தேஜ் பகதூர் யாதவ். பின், அந்த வீடியோ வெளியிட்டதற்காக, ராணுவம் தன்னைத் துன்புறுத்துவதாகக் கூறினார். இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.  பின், இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சுய விளம்பரத்துக்காக, வீடியோ வெளியிட்டதாகக் கூறப்பட்டது.

Tej Bahadur


சமீபத்தில் தனது பணிக்காலம் முடிந்தும் ஓய்வு கொடுக்க மறுக்கிறார்கள் என்று பகதூர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரை, ராணுவம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டதற்காக, அவரை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உணவுத்தரம் குறித்து புகார் தெரிவித்த, ராணுவ வீரர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close