2019 மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டு முறை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடுகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. மின்னணு வாக்கு இயந்திரத்தின் மீதான நம்பிக்கை இழந்துவிட்டதால், இனி வரும் தேர்தல்களில் வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு வர வேண்டும் என்று தி.மு.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 16 எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தன.

Election Commission


இந்நிலையில், வருகின்ற 2019 மக்களவை தேர்தலில், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும், ஒப்புகைச் சீட்டு முறை முழுமையாக பயன்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக, மத்திய அரசு 3,173 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வைத்த கோரிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகைச் சீட்டு வரும் இயந்திரம், கடந்த சட்டசபை தேர்தலில் சில வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக, நடைபெற இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் ஒப்புகைச் சீட்டு வரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!