வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (19/04/2017)

கடைசி தொடர்பு:19:11 (19/04/2017)

'மொட்டை அடித்து விட்டேன் இப்போ தாங்க 10 லட்சம்': சவாலை முறியடித்த சோனு நிகம்!

பாலிவுட்டின் முன்னணிப் பாடகர்களில் ஒருவரான சோனு நிகம் மவுலியா என்ற இஸ்லாமிய எழுத்தர் ஒருவர் விடுத்த சவாலை முறியடிக்க மொட்டை அடித்துள்ளார்.

சோனு

பாலிவுட் பாடகர் சோனு நிகம் சமீபத்தில் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். அதில், ‘மசூதிகளில் அதிகாலை ஒலிப்பெருக்கிகளில் ஓதப்படும் தொழுகைப் பாடல்கள்’ தனது தூக்கத்தை கெடுப்பதாக பதிவிட்டிருந்தார். மேலும், நபிகள் தோன்றிய காலத்தில் மின்சாரமே இருக்கவில்லை எனவும் கோயில்களிலும் குருத்வாராக்களிலும் இதுபோன்று சத்தங்கள் எழுப்பி யாரையும் தொந்தரவு செய்வதில்லை என சோனு நிகம் கூறியிருந்தார். 

இந்தக் கருத்தை எதிர்த்து இஸ்லாமிய எழுத்தர் ஒருவர், ‘அவரின் தலையை மொட்டையடிப்பவருக்கு தனிப்பட்ட முறையில் தானே முன்வந்து 10 லட்சம் ரூபாய் பரிசளிப்பதாக’ அறிவித்திருந்தார்.

இவரின் இந்த அறிவிப்புக்குப் பதிலளிக்கும் வகையில் சோனு நிகம் தலையை மொட்டையடித்துள்ளார். ’இப்போது 10 லட்சத்தை எடுத்துக்கொண்டு என் வீட்டுக்கு வாருங்கள்’ என தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.