வெளியிடப்பட்ட நேரம்: 01:44 (20/04/2017)

கடைசி தொடர்பு:08:18 (20/04/2017)

'ஒவ்வொரு இந்தியரும் விஐபி தான்..!'- ட்விட்டரில் நெகிழும் மோடி

'பிரதமர் உள்ளிட்ட விஐபிகள் யாரும் இனிமேல் சிவப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பயன்படுத்தக்கூடாது' என்று மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, 'ஒவ்வொரு இந்தியரும் முக்கியமானவர்தான். ஒவ்வொரு இந்தியரும் விஐபி தான்' என்று தனது ட்விட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் மேலும், 'சைரன் பயன்பாடு வெகு நாள்களுக்கு முன்னரே எடுத்திருக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை தற்போது எடுத்தது ஒரு புதிய தொடக்கத்தைத்தருகிறது. ஒவ்வொரு இந்தியரும் முக்கியமானவர்தான். ஒவ்வொரு இந்தியரும் விஐபிதான்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோடி.

'இந்தியாவில்... குடியரசுத் தலைவர், பிரதமர், முதலமைச்சர்கள், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய - மாநில அமைச்சர்கள் உள்ளிட்டவர்கள், சிவப்பு நிற சைரன்களைத் தங்கள் காரில் பயன்படுத்திவருவது வழக்கம். மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும்  நீல நிற சைரன்கள் உள்ள அரசு வாகனங்களைப் பயன்படுத்திவருகிறார்கள். மே 1-ம் தேதி முதல் விஐபி நிலையில் உள்ள யாரும் சிவப்பு மற்றும் நீல நிற சைரன்கள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அவசர காலத்துக்குப் பயன்படுத்தப்படும் தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களில் சிவப்பு சைரன்கள் பயன்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை' என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.