வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (20/04/2017)

கடைசி தொடர்பு:09:50 (20/04/2017)

12-ம் வகுப்பு மாணவன் ஏற்படுத்திய விபத்து : நடைபாதையில் உறங்கிய இருவர் பலி!

நேற்றிரவு, டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட் அருகே, 12-ம் வகுப்பு மாணவன் ஒருவன் காரை வேகமாக ஒட்டிச்சென்று நடைபாதையில் செலுத்தியதால், இரண்டு பேர் பலியாகி உள்ளனர்.

 

 

12-ம் வகுப்பு மாணவன் வேகமாக கார் ஓட்டிச்சென்றபோது, நிலைதடுமாறி கார் நடைபாதையில் ஏறியுள்ளது. அங்கு உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது கார் ஏறியதால், இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய 12-ம் வகுப்பு மாணவனை டெல்லி போலீஸார் கைதுசெய்து விசாரித்துவருகின்றனர். 

car accident delhi

நீங்க எப்படி பீல் பண்றீங்க