வெளியிடப்பட்ட நேரம்: 10:57 (20/04/2017)

கடைசி தொடர்பு:11:43 (20/04/2017)

இத்தனை கோடியா? வருமான வரித்துறையை அதிரவைத்த கோகுலம் சிட் ஃபண்ட்

'கோகுலம் சிட்ஸ் அண்டு பைனான்ஸ்' நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், அந்த நிறுவனம்  12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

gokulam chit funds
 

கோகுலம் நிதி நிறுவனம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய நான்கு  மாநிலங்களில்  செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் தலைமை அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. கோகுலம் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகவும், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் பலரின் கறுப்புப் பணத்தைப் புழக்கத்தில் விட உதவியதாகவும் புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து, கோகுலம் நிதி நிறுவன அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

gokulam chit funds
 

சென்னை, கோவை, கேரளா, பெங்களூரு உள்ளிட்ட  79 இடங்களில் நேற்று சோதனை நடந்தது. சுமார் 500 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை அசோக்நகரில் உள்ள கோகுலம் நிதி நிறுவன உரிமையாளர் கோபாலனின் வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை முடிவில், கோகுலம் நிதி நிறுவனம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க