காதல் திருமணம் செய்துகொண்டவர்களை அடித்து உதைத்த கிராமம்... ராஜஸ்தானில் பயங்கரம்! | Couple thrashed and paraded naked in Rajasthan's Banswara

வெளியிடப்பட்ட நேரம்: 14:07 (20/04/2017)

கடைசி தொடர்பு:14:14 (20/04/2017)

காதல் திருமணம் செய்துகொண்டவர்களை அடித்து உதைத்த கிராமம்... ராஜஸ்தானில் பயங்கரம்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், காதல் ஜோடியை நிர்வாணமாக்கி, அசிங்கப்படுத்திய சம்பவம் தொடர்பாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Couples attacked in rajesthan
 

ராஜஸ்தானில், பன்ஸ்வாரா அருகே உள்ள ஷம்புபூரா என்னும் கிராமத்தைச் சேர்ந்த காதல் ஜோடி, ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டனர். உறவினர்களான இருவரையும்  அவர்களின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்தக் கிராமமே அவர்களின் காதலை எதிர்த்தது. ஊரை விட்டு தப்பித்துச் சென்றவர்களைத் தண்டிக்க, தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இருவரும் குஜராத்தில் வசித்துவருவதை அறிந்த கிராமத்தினர், அவர்களைப் பிடித்து, கிராமத்துக்குக் கொண்டுவந்தனர். 

 


இதைத் தொடர்ந்து, இருவரையும் நிர்வாணமாக்கிய ஊர்மக்கள், சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அந்தச் சம்பவத்தை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அந்த வீடியோ, இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் தாக்கியதால் படுகாயமடைந்த இளைஞர்,  மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக, நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க