Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'சத்யராஜ் மன்னிப்பு கேட்டே ஆகணும்' : அடம்பிடிக்கும் வாட்டாள் நாகராஜ்

ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாகுபலி-2. இந்தப் படத்தின் ட்ரெய்லர், போஸ்டர்கள் வெளியாகி, எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன. இந்நிலையில், கடந்த 2008-ம் ஆண்டு சத்யராஜ் காவிரி விவகாரத்தில், கன்னடர்களுக்கு எதிராகத் தெரிவித்த கருத்துக்கு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

Vatal Nagaraj


குறிப்பாக, அவர் மன்னிப்பு கேட்காவிடின், படத்தை வெளியிட முடியாது என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து, கன்னட அமைப்பினருடன், நேற்று இயக்குநர் ராஜமௌலி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், சத்யராஜ் மன்னிப்பு கேடட்டால்தான் படத்தை வெளியிட முடியும் என்று கன்னட அமைப்பினர் தெரிவித்துவிட்டனர்.

இதனால், படத்தின் கர்நாடக உரிமை இதுவரை விற்கப்படாமலேயே உள்ளது. இந்நிலையில், "சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிடின், படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம். வருகின்ற 28-ம் தேதி பெங்களூரில் முழு அடைப்பு நடத்தப்படும். ராணுவமே வந்தாலும் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்" என்று கன்னட அமைப்புகளின் தலைவர் வாட்டாள் நாகராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, "இந்தப் படம் வெளியாகவில்லை என்றால், சத்யராஜுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. படம் வெளியாகாவிடின், எங்களுக்குத்தான் பிரச்னை" என்று ராஜமெளலி கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close