Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராகுல் காந்தியை விமர்சித்த பெண் நிர்வாகி காங்கிரஸிலிருந்து நீக்கம்!

காங்கிரஸ் கட்சியை வழிநடத்த ராகுல் தகுதியற்றவர் எனக் கூறிய பார்கா சுக்லா சிங், இன்று காலை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

sukhla

டெல்லி, மகளிர் ஆணைய முன்னாள் தலைவரான பார்கா சுக்லா சிங், 'காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியை நடத்த மனதளவில் தகுதியற்றவர்' என தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியிருந்தார். மேலும்,'காங்கிரஸ் மூத்த தலைவரான அஜய் மக்கான், பெண்களிடம் தவறாக நடக்கிறார். இந்த மாதிரியான பாலியல் துன்புறுத்தல்கள் கட்சிக்குள் நடப்பதை ராகுல் காந்தி கண்டுகொள்வதே இல்லை' எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸிலிருந்து முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளார் பார்கா சிங். இந்த நடவடிக்கையை காங்கிரஸின் ஒழுங்குமுறை குழு மேற்கொண்டுள்ளதாகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

சில நாள்களுக்கு முன்னர், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அர்விந்த் சிங் லவ்லி, கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close