Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஹோட்டல்களில் இனி சேவைக் கட்டணம் கட்டாயமில்லை...

ஹோட்டல்களில் விதிக்கப்படும் சேவைக் கட்டணம் கட்டாயமல்ல என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்தர உணவகங்கள், ரெஸ்டாரன்ட்கள், ஹோட்டல்களில் உணவுக்கான விலையுடன் சேர்ந்து சேவைக் கட்டணமும் விதிக்கப்படுவது வழக்கம்.

தற்போது ஹோட்டல்கள் சேவைக் கட்டணம் கட்டாயப்படுத்தி வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சேவைக்கட்டணம் என்பது நுகர்வோர்களின் விருப்பத் தெரிவு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நுகர்வோர் அமைச்சகம் ஜனவரி மாதம் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இது தொடர்பாக நுகர்வோர் அமைச்சகம் புதிய விதிமுறைகளை உருவாக்கி இருந்தது. அந்த புதிய விதிமுறைகளுக்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விதிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதனை செயல்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close