வீடு தேடி வருகிறது பெட்ரோல்! மத்திய அரசு அதிரடி திட்டம் | Petrol will be delivered in home, says Central Minister Dharmendra Pradhan

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (21/04/2017)

கடைசி தொடர்பு:17:38 (21/04/2017)

வீடு தேடி வருகிறது பெட்ரோல்! மத்திய அரசு அதிரடி திட்டம்

முன்பதிவின் அடிப்படையில் வருங்காலத்தில் பெட்ரோல் வீட்டுக்கே வந்து ‘ஹோம்-டெலிவரி’ செய்யப்படும் என மத்திய பெட்ரோலியத் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

petrol

மக்கள் பெட்ரோலுக்காக நீண்ட வரிசையில் நின்று அதிக நேரத்தை செலவழிப்பதால், மத்திய அரசு விரைவில் பெட்ரோல் வீட்டுக்கே வந்து  ‘ஹோம்-டெலிவரி’ செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய அரசு செய்துவருகிறது என  அமைச்சர் தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

எண்ணெய் வளங்களை உபயோகிப்பதில் உலக அளவில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம். தற்போது மே 1-ம் தேதியிலிருந்து ஐந்து நகரங்களில் பெட்ரோல் விலை தினமும் நிர்ணயிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.