உணவகங்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பு!

ram Vilas Paswan

உணவகங்களில் வசூலிக்கப்படும் சேவை கட்டணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான்.

இது குறித்து ராம் விலாஸ் பஸ்வான் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், 'மத்திய அரசு, சேவை கட்டணம் தொடர்பான புதிய விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சேவை கட்டணம் என்பது இனி கட்டாயம் கிடையாது, விருப்பப்பட்டால் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். உணவகங்கள், வாடிக்கையாளர்கள் எவ்வளவு சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யக் கூடாது. அது வாடிக்கையாளரின் விருப்பத்துக்கு விட்டுவிடப்பட வேண்டும். இந்த புதிய விதிமுறைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சீக்கிரம், இது குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!