வெளியிடப்பட்ட நேரம்: 20:47 (23/04/2017)

கடைசி தொடர்பு:10:30 (24/04/2017)

பெண் குழந்தை பிறந்ததால் முத்தலாக்: நெட்பால் வீராங்கனைக்கு நடந்த கொடுமை!

தேசிய அளவிலான நெட்பால் வீராங்கனை ஷியும்லா ஜாவீதுக்கு பெண் குழந்தை பிறந்ததால், அவரின் கணவர் முத்தலாக் அனுப்பியுள்ளார்.

shyumla javeed

அண்மையில், இஸ்லாம் மதத்தினர் கடைபிடிக்கும் முத்தலாக் முறை, பல விமர்சனங்களையும் விவாதங்களையும் கிளப்பிவருகிறது. பெண் விடுதலைக்கு எதிரான முத்தலாக் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும் என, பெண்கள் தரப்பிலும் கூறப்பட்டுவருகிறது. மத்தியில் ஆளும் பா.ஜ.க-வும் முத்தலாக் முறைக்கு எதிராகப் பேசிவருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தேசிய நெட்பால் வீராங்கனை ஷியும்லா ஜாவீத், முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு பெண் குழந்தை பிறந்ததால், அவரது கணவர் செல்பேசி மூலமாக முத்தலாக் அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்திடம் இவர் முறையிட்டுள்ளார்.