நான் நூறு சதவீத நடிகன்! நவாஸுதின் சித்திக் நறுக் வீடியோ

பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் வெளியிட்டுள்ள வீடியோவில், நான் பல மதத்தினைச் சேர்ந்தவன். ஆனால் 100 சதவீத நடிகன் எனக் கூறியுள்ளார்.

மதத்தை முன்னிறுத்தி பல சர்ச்சைகள் கிளம்புவது இந்தியாவில் புதிதான ஒன்றல்ல. அண்மையில் பாலிவுட் பாடகர் சோனு நிகம் இஸ்லாமியர்களின் தொழுகை பற்றிய கருத்தைக் கூறி சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து நடிகை கங்கனா ரனாவத்தும் மத வழிபாடுகள் குறித்தும் நடைமுறைகள் குறித்தும் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

 

 

இந்நிலையில், பாலிவுட் நடிகர் நவாஸுதின் சித்திக் தனது ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோ காட்சியில் அவர் பல பெயர் பலகைகளைக் காண்பித்த வண்ணம் இருக்கிறார். அதில், 'நான் 16.66 சதவீதம் இஸ்லாமியன், 16.66 சதவீதம் ஹிந்து, 16.66 சதவீதம் கிறிஸ்தவன், 16.66 சதவீதம் சீக்கியன், 16.66 சதவீதம் புத்த மதமும் 16.66 சதவீதம் பிற அனைத்து மதத்தையும் சேர்ந்தவன். அதற்கும் மேலாக நான் 100 சதவீதம் முழுமையான நடிகன்' எனக் கூறியுள்ளார். நவாஸுதின் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!