ஆழ்துளை கிணற்றில் உயிருக்குப் போராடி வந்த குழந்தை மரணம்! | Child fell down in a borewell is dead today!

வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (24/04/2017)

கடைசி தொடர்பு:20:23 (24/04/2017)

ஆழ்துளை கிணற்றில் உயிருக்குப் போராடி வந்த குழந்தை மரணம்!

ஆழ்துளை கிணற்றில் விழுந்து இரண்டு நாட்களாக உயிருக்குப் போராடி வந்த ஆறு வயது குழந்தை மரணமடைந்தது. 

ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை

கர்நாடகா பெலகாவி பகுதியில், ஆழ்துளை கிணறு ஒன்றில் ஆறு வயது குழந்தை காவேரி கடந்த ஏப்ரல் 22-ம் தேதி மாலை தவறி விழுந்தாள். இந்நிகழ்வு ஒட்டுமொத்த பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியது. தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குழந்தை மூச்சுவிடுவதற்காக  ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வந்தது.

கடந்த 48 மணி நேரமாகப் போராடியும் குழந்தையைக் காப்பாற்ற முடியாமல் தற்போது, அக்குழந்தை பலியாகியுள்ளது. இதையடுத்து, இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது, குற்றப்பிரிவு வழக்கு பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.