நீங்களே இந்தியை திணிக்கலாமா ? மோடிக்கு திவ்யா ஸ்பந்தனா கேள்வி | Divya Spandana questions modi over hindi imposition

வெளியிடப்பட்ட நேரம்: 22:21 (24/04/2017)

கடைசி தொடர்பு:22:20 (24/04/2017)

நீங்களே இந்தியை திணிக்கலாமா ? மோடிக்கு திவ்யா ஸ்பந்தனா கேள்வி

பல மாநில மொழிகளில் புத்தாண்டு வாழ்த்து கூறிய மோடியை குறிப்பிட்டு, இந்தி திணிப்புக்கு எதிரான கருத்தை பதிவிட்டுள்ளார் நடிகையும், முன்னாள் எம்.பியுமான திவ்யா ஸ்பந்தனா.

கடந்த 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அதற்கு மோடி தனது ட்விட்டர் பதிவில் வாழ்த்து தெரிவித்திருந்தார். 'என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்' என அவர் தமிழில் ட்வீட் செய்தார். இதேபோல மலையாளம், ஒடியா, பெங்காலி, கன்னடம் என அந்தந்த மாநில மொழிகளில் புத்தாண்டு வாழ்த்தை அவர் பதிவிட்டார். இந்நிலையில், மோடியின் பல மொழி ட்வீட்டை தாக்கி நடிகை திவ்யா ஸ்பந்தனா இன்று ட்வீட் செய்துள்ளார்.

இது குறித்த தனது பதிவில், 'எங்கள் மாநில மொழிகளில் வாழ்த்து தெரிவிக்கிறீர்கள். வேற்றுமையில் ஒற்றுமையை காக்க வேண்டி பேசுகிறீர்கள். பிறகு சத்தமில்லாமல் இந்தியை திணிக்கிறீர்கள். இதற்கு என்ன அர்த்தம்?' என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதையடுத்து திவ்யாவின் கருத்துக்கு ஆதரவான கருத்துகளை சமூக வலைதளத்தினர் எழுப்பி வருகின்றனர்.