பசுமாடுகளுக்கும் இனி 'ஆதார் கார்டு'... புது பிளானில் மத்திய அரசு! | central government plans aadhar card for cows

வெளியிடப்பட்ட நேரம்: 07:23 (25/04/2017)

கடைசி தொடர்பு:07:34 (25/04/2017)

பசுமாடுகளுக்கும் இனி 'ஆதார் கார்டு'... புது பிளானில் மத்திய அரசு!

பசுமாடுகள் கடத்தப்பட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், அவற்றுக்கு 'ஆதார்' போன்று, அடையாள எண் வழங்க வேண்டும் என, மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது.

ஆதார்

பல மாநிலங்களில், பசுமாடுகளைக் கடத்திக் கொன்றதாகப் பலர் மீது தாக்குதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து, பசு பாதுகாப்பு தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் கமிட்டி ஒன்றை அமைத்துள்ளது.

இந்த நிலையில், அந்தக் கமிட்டி சில பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அதாவது,
பசுக்கள் கடத்தப்படுவதைத் தவிர்க்க, அதன் எண்ணிக்கை பற்றிய புள்ளி விபரங்கள் தேவை. ஆதார் எண்ணைப் போல அதற்கென தனியான அடையாள எண்ணை உருவாக்கலாம்; அதில் மாடுகளின் வயது, பாலினம், வகை, இருக்கும் இடம், எடை, நிறம், வால், தனிப்பட்ட அடையாளம் போன்ற விவரங்களைப் பதிவுசெய்யலாம். இதன்மூலம், பசு பாதுகாப்பு மற்றும் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கால்நடை உற்பத்தியைப் பெருக்கவும் முடியும்.

இது மட்டுமன்றி, கைவிடப்பட்ட பசு மாடுகளைப் பாதுகாப்பது மாநில அரசுகளின் கடமை. இதற்காக, மாவட்டம்தோறும் 500 பசு மாடுகளைப் பாதுகாக்கும் வகையில், கூடம் அமைக்கப்பட வேண்டும் என்று அந்த கமிட்டி பரிந்துரைத்துள்ளது. மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை இனி பொறுத்திருந்து பார்க்கலாம்.