சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதல்: இறந்த தமிழக வீரர்களின் உடல்கள் விமான நிலையத்துக்கு வந்தது

சத்தீஸ்கரில் உள்ள வனப்பகுதியில், மாவோயிஸ்ட்டுகள் நடத்திய தாக்குதலில் 25 மத்திய ராணுவப் படை வீரர்கள் பலியாயினர். இந்த தாக்குதலில், தமிழகத்தைச் சேரந்த 4 வீரர்களும் இறந்தனர். சேலம் கங்கவலியைச் சேர்ந்த திருமுருகன், திருவாரூர் நல்லூரைச் சேர்ந்த பத்மாநாபன், திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தைச் சேர்ந்த செந்தில் குமார், மதுரை பெரிய பூலாம்பட்டியைச் சேர்ந்த அழகுபாண்டி ஆகிய நான்கு பேரும் பலியாயினர். இதையடுத்து, அழகுபாண்டியின் உடல் மதுரை விமான நிலையத்துக்கும் மற்றவர்கள் உடல் திருச்சி விமான நிலையத்துக்கும் கொண்டு வரப்பட்டது.

விமான நிலையத்திலிருந்து வீரர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு ராணுவ வீரர்களின் உடல்களைப் பெற பலியான வீரர்களின் உறவினர்கள் வந்திருந்தனர். மேலும், விமான நிலையத்தில் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்ட பின்பு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!