வெளியிடப்பட்ட நேரம்: 06:01 (26/04/2017)

கடைசி தொடர்பு:07:51 (26/04/2017)

ஐஐடி உள்பட இந்திய கல்வி நிறுவனங்களில் புகுந்த பாகிஸ்தான் ஹேக்கர்கள்..!

ஐஐடி உள்பட இந்தியாவின் நான்கு முக்கிய கல்வி நிறுவனங்களின் அதிகாரபூர்வ இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டன.

hackers

ஐஐடி டெல்லி, அலிகர் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், ஐஐடி புவனேஷ்வர் ஆகிய நான்கு கல்வி நிறுவனங்களின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டன. தளங்களில் ஊடுருவிய ஹேக்கர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துகளை இணையதளங்களில் பதிவேற்றியுள்ளனர். 'பாகிஸ்தான் ஹக்ஸ்சர்ஸ் க்ரூ' என்ற பெயரில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்ற வாசகம் அனைத்து தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும், 'உங்களுடைய ராணுவ வீரர்கள், காஷ்மீரில் அப்பாவி மக்களைக் கொன்றுகொண்டிருக்கிறார்கள். குடும்பங்களை அழிக்கிறார்கள். உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டால், எப்படி உணர்வீர்கள்' என நீள்கிறது அந்த வாசகம். நேற்று இரவு 9 மணி அளவில் கல்வி நிறுவனங்களில் இணையதளங்கள் மீட்கப்பட்டன.